Trisha liplock : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவர த்ரிஷா. இவர் தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி, விக்ரம், சூர்யா, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அவ்வபோது சோலோ படங்களிலும் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1,2 படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது விஜயின் லியோ திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்துள்ளார். அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் ஹீரோயின்னாக த்ரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர ஒரு சில புதிய படங்களிலும் அவர் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இந்த நிலையில் நடிகை த்ரிஷாவுடன் லிப் லாக் காட்சியில் நடிக்கவே மாட்டேன் என ஒரு நடிகர் கூறியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 96 படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் பரஸ்பரம் விடைபெறும் காட்சி இருக்கும் அந்த காட்சியில் திரிஷாவும் விஜய் சேதுபதியும் முத்தமிடாமல் நகர்ந்து சென்று இருப்பார்கள் ஆனால் ஸ்கிரிப்டில் எழுதியது.
விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவும் அந்த காட்சியில் லிப்லாக் செய்வது போல் இருந்தது படத்தில் இந்த காட்சி மாற்றப்பட்டது அதற்கு காரணம் விஜய் சேதுபதி முத்த காட்சியில் நடிக்க தயங்கியதால் வேறு வழி இல்லாமல் அந்த காட்சியில் இருவரும் முத்தம் கொடுக்க வேண்டாம் பிரிவது போல் காட்டி சீனை மாற்றிவிட்டார்கள்.