RJ Balaji : தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் ஆர்.ஜே பாலாஜி. இவர் குணச்சித்திர நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்து பின் ஹீரோ, இயக்குனர் அவதாரம் எடுத்து வெற்றிகளை அள்ளி வருகிறார்கள். முதலில் புதுயுகம் என்னும் படத்தில் வாய்ஸ் கொடுத்தார்.
அதன் பிறகு எதிர்நீச்சல் படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்தார் . வடகறி, இது என்ன மாயம், ஜில் ஜங் ஜக், புகழ், முத்தின கத்திரிக்கா என பல்வேறு படங்களில் நடித்து வந்த இவருக்கு எல் கே ஜி படம் ஹீரோவாக அறிமுகமானார் முதல் படமே பெரிய வெற்றியை பதிவு செய்தது அடுத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இந்த படம் நாம் சொல்ல தேவையே இல்ல பலரையும் கவர்ந்து விழுந்தது. வீட்டில் விசேஷம் படமும் பெரிய ஹிட் அடித்தது இப்போ சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதோட மட்டுமல்லாமல் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் சேனலில் பணியாற்றியும் வருகிறார்.
இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஆர் ஜே பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்குமார் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. தான் உண்டு தான் வேலை உண்டு என இருக்கிறார் சினிமாவில் ஒரு படம் நடித்து முடித்து விட்டால் அடுத்தது அவரைப் பற்றிய பேச்சுகள் எதுவுமே வராது.
தேடிவந்த 6 பிளாக்பஸ்டர் படங்களை தவறவிட்ட விஜய்..! இப்போ பீல் பண்ணி என்ன பண்றது
அடுத்த படம் ரிலீஸ் ஆகும் போது தான் அஜித்தை பற்றி பேசுக்கள் அதிகம் இருக்கும். பொது வேலைகள் என்றால் அஜித் முன்னாடி வந்து விடுவார். அதாவது ஓட்டு போடுவது என்றால் மக்களோடு மக்களாக இருப்பார்கள் அதெல்லாம் ஒரு ஹீரோவாக செய்வதை மிகப் பெரிய விஷயம். அவர்தான் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என ஆர் ஜி பாலாஜி கூறியுள்ளார்.