திரை உலகில் முன்னணி நடிகர்களாக ஜொலிக்கும் ஒவ்வொரு ஹீரோவும் குறைந்தது 50 கோடிக்கு மேல்தான் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் முதன்மையானவராக இருந்தவர் தளபதி விஜய் இவர் தன்னுடைய ஒவ்வொரு படம் வெற்றி பெறும்..
போது கணிசமாக 10 கோடியில் இருந்து 20 கோடி வரை உயர்த்துவது வழக்கம்.. அந்த வகையில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த திரைப்படம் வாரிசு இந்த படம் சுமார் 110 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோவாக தளபதி விஜய் தான் பார்க்கப்பட்டார்.
ஆனால் தற்பொழுது அந்த இடத்திற்கு ஆப்பு வைத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் அவர் வேறு யாரும் அல்ல ஸ்டைலிஷ் ஹீரோ அல்லு அர்ஜுன் தான் இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களை பொழுது ஒருவதால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்தது கடைசியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
வசூல் மட்டுமே 300 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது அதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள திரைப்படத்திற்கு தான் அவர் 125 கோடி சம்பளம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் மூலம் அவர் ஹிந்தியில் முதல் முதலாககால்தடம் பதிகிறார். இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் 125 கோடி சம்பளம் வாங்குவதன் மூலம் விஜயை சம்பள விஷயத்தில் பீட் பண்ணி டாப் இடத்தில் இருக்கிறார். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.