சரவணன் அருள் நடித்த “தி லெஜண்ட்” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – வெளியான தகவல்.

saravanan-arul-
saravanan-arul-

சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் நடித்துள்ள புதிய திரைப்படம் தி லெஜன்ட். இந்த படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காதல், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என பட குழுவும், ஹீரோவும் பெரும் அளவு நம்பி இருக்கின்றனர்.

தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் தி லெஜன்ட் படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தி லெஜெண்ட் திரைப்படத்தில் ஹீரோ சரவணன் அருளுடன் கைகோர்த்து வம்சி கிருஷ்ணா, சுமன், பிரபு, விவேக், ஊர்வசி ரவுத்தேலா, தம்பி ராமையா, யோகி பாபு, நாசர், மயில்சாமி, காளி வெங்கட் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர திரைபட்டாளமே நடித்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மற்றும் மக்களை கவர்ந்து இழுத்தது இதில் ஹீரோ சரவணன் அருள் ஆட்டம், பாட்டம், பஞ்ச் டயலாக், வசனம், ஆக்சன் என அனைத்திலும் பின்னி படலெடுத்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க எதிர்நோக்கி இருக்கின்றனர்.

படம் ஒரு வழியாக வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது தற்பொழுது பட குழுவும் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சரவணன் அருளும் தற்பொழுது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் இந்தி உரிமையை கணேஷ் பிலிம்ஸ் நம்பி ராஜன் என்பவரிடம் வெளியிட்டு உரிமையை கொடுத்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹீரோ சரவணன் அருள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..