ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் இந்த தமிழ் நடிகரின் மனைவியா? விவாகரத்து பெற்ற மிர்னா..

jailer
jailer

Jailer Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் விமர்சன ரீதியாக படும் தோல்வியினை சந்தித்தது அப்படி தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் பெரும் கேள்விக்கு உள்ளானது.

இதனையடுத்து வெற்றி திரைப்படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினிகாந்த் இருந்து வந்தார். அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் கதை சுமாராக இருந்தாலும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்திருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு பாடலும் சோசியல் மீடியாவில் நல்ல ரிச்சியினை பெற்றுள்ளது. வசூல் வேட்டையை நடத்தி வரும் ஜெயிலர் தற்பொழுது வரையிலும் 375.4 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சன் பிரக்சஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மேலும் இனிவரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் எனவும் கண்டிப்பாக ஜெயிலர் ரூபாய் 800 கோடியை தொட்டுவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றி விழா இன்று நடந்து முடிந்திருக்கும் நிலையில் இதில் நெல்சன் உள்ளிட்ட ஏராளமான குழுவினர்கள் தயாரிப்பாளர்களை சந்தித்து ஜெயிலர் வெற்றிக்கு நன்றி கூறியிருந்தனர்.

அப்படி ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா பிரபல தமிழ் நடிகரின் மனைவி என்றும் தற்போது இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.  ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

jailer
jailer

இவர் இதற்கு முன்பு தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் படத்தில் நடித்து இருந்தார். அப்பொழுது நடிகர் அபி சரவணன் என்பவர் உடன் காதல் ஏற்பட ரகசிய திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்து கொண்டு சில காலங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று பிரிந்தனர்.