தமிழ் சினிமா உலகில் அண்மை காலமாக இளம் இயக்குனர்கள் எதிர்பார்க்காத படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் சொல்லவே வேண்டாம் அவர் எடுக்கும் ஒவ்வொரு படங்களுமே வெற்றி படங்களாக மாறுகின்றன அந்த வகையில் இவர் கடைசியாக எடுத்த விக்ரம் திரைப்படம்.
பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை விட வசூல் ரீதியாக 400 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்பரமாக இருக்கிறார். ஆம் தளபதி 67 படத்தை எடுக்க தற்போது கதை எழுதி வருவதாக சொல்லப்படுகிறது இது இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் படம் என்றால் பல நடிகர் நடிகைகள்..
மற்ற படங்களை வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு படத்தில் நடிக்க வருகின்றனர் ஆனால் அப்படிப்பட்ட லோகேஷின் படமே வேண்டாம் என ஒருவர் மறுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அந்த நடிகர் வேறு யாருமல்ல இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் என கூறப்படுகிறது இவரை விக்ரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அவர் அதை மறுத்து உள்ளார். காரணம் அப்பொழுது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்புவை வைத்து விந்து தணிந்தது காடு படத்தை பிஸியாக எடுத்து வந்ததால் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.. அதனால் லோகேஷின் அடுத்த படத்தில் வாய்ப்பு கௌதம் மேனனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவும் தளபதி 67 படத்தில் நடிப்பதற்கு முன்பாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் ஆடியோ லான்ச் கூட சமீபத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார் இந்த படத்தை பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.