நடிகர் விஷால் தொடர்ந்து ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தாலும் அண்மைக்காலமாக இவரது படங்கள் பெரிதும் வெற்றியை ருசிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் போலீஸ் கெட்டபில் நடித்து வருவதால் படத்தில் ஆக்சன் சீன்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என தெரிய வருகிறது.
இந்த படத்தின் மூலம் விஷாலின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷாலின் லத்தி படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்ததை அடுத்து நடிகர் விஷால் லத்தி படத்தின் சூட்டிங்கில் ஸ்டெண்ட் காட்சிகளில் நடித்து வரும் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது
அந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது லத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது. ஆம் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை கூடிய விரைவிலேயே படக்குழு இது குறித்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலின் லத்தி படம் வெளியாகும் என கூறப்படுகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி தான்..
சிம்பு நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் ஒரே தேதியில் விஷால் மற்றும் சிம்புவின் படங்கள் ரிலீஸ் ஆவதால் இருவருக்கும் செம போட்டி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்