“இந்தியன் 2” படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..! விவேக் கதாபாத்திரத்தில் இவரா.?

indian-
indian-

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது. முதலாவதாக கமல் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதற்கு ரெடி ஆவதற்காக உலகநாயகன் கமலஹாசன் அமெரிக்கா சென்று உள்ளார் வந்த உடனேயே  இந்தியன் 2 படத்தில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது அதே போல இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நடிகர், நடிகைகளும் அதற்குள்ளேயே இந்த படத்திற்கு ரெடியாவார்கள் என கூறப்படுகிறது குறிப்பாக இயக்குனர் ஷங்கர்.

தெலுங்கில் ராம் சரணை வைத்து RC 15 எனும் படத்தை இயக்கி வருகிறார். இறுதி கட்டப்படிப்பு விறுவிறுப்பாக போகிறது அதை முடித்துவிட்டு இந்தியன் 2 படத்தில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது அப்படி என்றால் செப்டம்பர் 13ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தெரிய வருகிறது. ஏற்கனவே கொஞ்சம் சீன்கள் எடுக்கப்பட்டிருந்தாலும்..

மீண்டும் தொடங்குவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் இந்த படத்தில் நடித்த நெடி முடி வேணு, விவேக் போன்றவர்கள் மறைந்தனர் இதனால் அவருக்கு பதில் யார் நடிப்பார்கள் என்பது தற்பொழுது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில்  நவரச நாயகன் கார்த்தி இந்த படத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்தியை  நெடுமுடி வேணு  அல்லது விவேக் கதா பாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிடும் என சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் கார்த்தி கொடுக்கப்பட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுப்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.