“தேசிய விருது அழகான பிறந்தநாள் பரிசு” பதிவை போட்டு சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன முன்னணி நடிகர்.! வைரல் புகைப்படம்.

SURYA
SURYA

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் பேவரட் படங்களாக அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அண்மைக்காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த சூரறை போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் சமூக அக்கறை உள்ள படங்களாக இருந்து வருகின்றன.

அதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் ஒரு மதிப்பிற்குரியவராக காணப்படுகிறார். தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுடன் இணைந்து வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வாடிவாசல் படம் என பல படங்களை கைவசம்  வைத்துள்ளார்.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரறை போற்று திரைப்படம் நேற்று வழங்கப்பட்ட 68 ஆவது தேசிய விருது பட்டியலில் சூரறை போற்று திரைப்படம் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யா சிறந்த நடிகருக்கான பட்டியலில் இணைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறந்த இசையமைப்பாளர் சிறந்த இயக்குனர் போன்ற ஐந்து விருதுகளை சூரறை போற்று திரைப்படம் தட்டியுள்ளது. இதற்கு சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று சூர்யாவின் பிறந்தநாள் அதுவுமாக இப்படி ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளதால் அதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் மலையாள நடிகர் மம்முட்டியும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பேசியது தேசிய விருது அழகான பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. அன்புள்ள சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் என சூர்யா உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.