ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 8 பிரிவுகளின் கீழ் சூர்யா ஜோதிகா உள்பட 5 பேர் மீது வழக்கு தொடர்ந்த வன்னியர் சங்க தலைவர்..!

சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் வன்னிய சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்டியதன் காரணமாக வன்னிய சமுதாயத்தினர் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

அந்த வகையில் வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா-ஜோதிகா உள்பட 5 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வாறு வெளிவந்த தகவல் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையானது சில நாட்களில் ஓய்ந்து விடும் என நினைத்த நிலையில் மிக பயங்கரமாக வெடித்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி தான் காரணம்.  ஏனெனில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு முன்னாள் வன்னியர் சங்க தலைவரின் பெயரை வைத்தது மட்டும் இல்லாமல் அக்னி கலசத்தையும் இந்த திரைப்படத்தில் காட்டி வன்னியர்களை கோபமுற்ற உள்ளார்கள்.

இதனால் வன்னியர் சமுதாயமே கோபத்தில் இருப்பது மட்டுமில்லாமல் மிகப்பெரிய பிரச்சனையும் உருவாக்கி விட்டது. இவ்வாறு இந்த பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வது என நினைத்த சூர்யா உடனே தன் திரைப்படத்தில் இருந்த அந்த காட்சிகளை நீக்கி விட்டார்.

இதை தொடர்ந்து சூர்யா மற்றும் இயக்குனர் தரப்பிலிருந்து என்ன விவரம் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வன்னியர் சங்கம் இல்லை அந்த வகையில் மௌனம் காத்த சூர்யா  மீது வழக்கு தொடுத்து ஐந்து கோடி  நஷ்ட ஈடு கேட்டு அன்புமணி வழக்கு தொடர்ந்தார்.

surya jothika-1
surya jothika-1

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு மத்திய மாநில அரசுகளும் விருது பரிந்துரை செய்யக் கூடாது எனவும் கூறியுள்ளார். இதைதொடர்ந்து தற்போதைய வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி மற்றொரு வழக்கை தொடர்ந்துள்ளார்.

இதில் சூர்யா ஜோதிகா 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இந்த திரைப்படத்தின் இயக்குனர்  மற்றுமின்றி அமேசான் நிறுவனத்தின் மீது அதிரடியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

surya jothika-2

இவ்வாறு இந்த தண்டனை சட்டம் 1860  பிரிவுகளில்  153,153a 1,499,500,503,503,200,199,960 ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.