கார்த்திக் மற்றும் சங்கர் மகள் அதிதி நடிக்கும் விருமன் திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

viruman
viruman

திரையுலகில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கார்த்திக் இவர் பிரபல முன்னணி மூத்த நடிகர் சிவகுமாரின் மகன் மட்டுமில்லாமல் சூர்யாவின் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாகவே ஏகப்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் புகழ் பாராட்டு என வாங்கி குவித்தது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் நடிகர் கார்த்திக் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த திரைப்படமாக அமைந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே கிராம கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் தேனி போன்ற பகுதியில் மட்டுமே பெரும்பாலும் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஆக்ரோஷமாக நடிக்க உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முழுமையாக முடிவடைய உள்ளதாக பட குழுவினர்கள் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.