“வாரிசு” பட நடிகர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.! யார் யார் தெரியுமா.?

vijay-
vijay-

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் முக்கிய ஒருவர். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி வரவேற்பார்கள். அப்படித்தான் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் படம் வெளிவந்து மக்கள் எதிர்பார்த்தபடி இல்லாததால் சுமாரான வரவேற்பை பெற்றது இருந்தும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் உடனடியாக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். விஜய் எப்பொழுதும் தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் படியான படங்களை கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்து நடிப்பார்.

ஆனால் ஒரு சில படங்கள் அவரை ஏமாற்றி விடுகின்றன. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து தான் வருகிறார்  அப்படி தற்போது நடித்த வரும் வாரிசு திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சிறந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ஹீரோயினாக முதல்முறையாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும் வாரிசு படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் பிரபு, ஷாம், குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாரிசு பட ஷூட்டிங்கில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையதளத்தில் கசிந்தன.

அது போல் தற்போது பிரகாஷ்ராஜ் மற்றும் ஷாம் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இது வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் தான் எடுக்கப்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும் இவர்கள் இருவரும் வாரிசு படத்தில் நடித்து வருவதால் அந்த போட்டோ சூட்டிங் ஸ்பாட்டில் தான் எடுக்கப்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.

varisu
varisu