நடிகர் விவேக் இறந்தது சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் ரசிகர்கள்,மக்கள் என அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது அவர் எந்த திரைப் படங்கள் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் சமூகத்தை இப்படி தான் பாதுகாக்க வேண்டும் என்பது போல் ஒரு கருத்தை கண்டிப்பாக கூறியிருப்பார் ஆனால் அவர் கூறியது நிஜத்திலும் நடந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக அவர் திரைப்படங்களில் சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் அடிக்கடி வைத்து வந்தார் தற்போது மக்களால் மறக்க முடியாது அந்த வசனம் தான் இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் இந்த வசனம் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் மக்கள் மனதில் கட்டில் போட்டு அமர்ந்துவிட்டார்.
மேலும் விவேக்கின் இறுதி ஊர்வலத்திற்கு நிறைய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்தது இந்நிலையில் விவேக்கின் இறுதி ஆசை இரண்டு உள்ளதாம் அதனைப்பற்றிய தற்போது நாம் பார்ப்போம்.
ஆம் விவேக் முதலில் இவர் நண்பராக பழகி வந்த அப்துல் கலாம் ஆசைப்படி இவர் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற முயற்சி எடுத்துள்ளார் ஆனால் 33 லட்சம் மரக்கன்றுகளை மட்டும் விவேக் நட்டு வைத்துள்ளார் ஆனால் அவரது ஆசை எட்ட முடியாமல் போய்விட்டது.
அதேபோல் ஒரு திரைப்படத்தை ஒன்றையும் இயக்க இருந்தாராம் ஆம் சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளார் இதற்கு நடிகர்கள் நடிகைகள் படக்குழுவினர்கள் எல்லாம் தேர்வு செய்த நிலையில் விவேக் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் ரசிகர்களுக்கு கொடுத்து வைக்காமல் போய்விட்டது ஏனென்றால் விவேக்கை முதன்முதலாக இயக்குநராக பார்ப்பதற்கு தான்.
இதனையடுத்து விவேக் ஆசைபடி இளைஞர்கள் பலரும் அவரது இறப்பிற்கு முக்கியத்துவமாக மரக்கன்றுகளை நட்டு வைக்கும் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி வருகிறது.