சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையை பற்றி தினமும் ஒரு அதிர்ச்சியான தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் அந்த வகையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரா தற்கொலை செய்தது பாதி தனது குடும்ப பிரச்சனை என்றால் மீதி அவரது வருங்கால கணவரான ஹேம்நாத் தான்.
சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது ஹேம்நாத்திற்கு பிடிக்கவில்லை இதைப்பற்றி பலமுறை சித்ராவை சந்தேகப்பட்டு வந்த ஹேம்நாத் சித்ராவை வாய்க்கு வந்தபடி அவ்வபோது திட்டி இருக்கிறார் என்பது அவரை விசாரித்தபோது தெரியவந்துள்ளது.
மேலும் சித்திரா இறப்பதற்கு ஒரு சிலநாட்கள் முன்பு ஹேம்நாத் தன்னை வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என்று தனது வருங்கால மாமனார் உடன் போனில் பேசியுள்ளார் அப்போது அவர் போனில் என்னை மிகவும் சந்தேகப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
அவர் பேசிய குரல் பதிவை சித்ராவின் செல்போனில் பதிவாகி உள்ளது ஆனால் அதை அழித்துவிட்டார் ஹேம்நாத் இருந்தாலும் சைபர் க்ரைம் காவல்துறையினர் ரெகவரி சாப்ட்வேர் மூலம் அவர் பேசிய குரல் பதிவுகளை மீட்டெடுத்துள்ளனர்.
இதனை வைத்துப் பார்க்கும் போது சித்திராவின் தற்கொலைக்கு முழுமையாக ஹேம்நாத் தான் காரணம் என்று காவல்துறையினர் சந்தேகப்பட்டு வந்த நிலையில் அவரை ஆர்டிஓ விசாரணைக்கு அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளனராம்.