தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அண்மை காலமாக இவர் தமிழ் சினிமாவில் தான் தொடர்ந்து படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த, O2 ஆகிய படங்கள் வெளிவந்தன.
அதனை தொடர்ந்து தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கையில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துள்ளன அந்த வகையில் ஜவான், கனெக்ட், கோல்ட், இறைவன் போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. முதலாவதாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க மறுபக்கம் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகிறது. அதில் ஒன்றாக நிகிலேஷ் கிருஷ்ணா கூறிய கதை ரொம்ப பிடித்து போகவே நயன்தாரா நடிக்க ஒப்பு கொண்டார்.
அந்த படம் நயன்தாராவுக்கு 75 ஆவது திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஒரு சமையல்காரியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது அதாவது ஒரு சாதாரண சமையல்காரியாக இருக்கும் இவர் மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்து ஒரு சமையல் கம்பெனியே நடத்துவது போல..
படம் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 20 கோடியாம் இதில் பாதியை சம்பளமாக கேட்டுள்ளார் நயன்தாரா இந்த படத்திற்காக 10 கோடி சம்பளம் வாங்க உள்ளார். படத்தை ஜி ஸ்டூடியோ தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.