திரை உலகில் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகர் நடிகைகள் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பது தற்போதைய நிலைமை ஆனால் 90 காலகட்டங்களில் கொழுக் மொழுக்கென்று இருந்துகொண்டு தமிழ் சினிமா உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நடிகை குஷ்பு.
முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து “தர்மத்தின் தலைவன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்ட தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.
இதனால் திரையுலகில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன அதுவும் டாப் நடிகர்களான கமல், கார்த்திக், பிரபு முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து கிடைத்ததால் தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத உச்சத்தைத் தொட்டு பார்த்தார் நடிகை குஷ்பு. இப்படி சினிமா உலகில் வலம் வந்தாலும் சின்னத்திரையிலும் கால்தடம் பதித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர். சி யை திருமணம் செய்து கொண்ட பிறகு ஓரளவு சினிமாவில் தலைகாட்டி வந்தாலும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி அரசியல் களத்தில் குதித்தார். பெருமளவு தற்போது அரசியலில் ஈடுபட்டு வந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக “அண்ணாத்த” திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்
மேலும் இந்தத் திரைப்படத்திற்காக குஷ்பூ தனது உடல் எடையை குறைத்து சிக்குன்னு மாறி உள்ளார். இந்த நிலையில் தனது குடும்பத்துடன் இணைந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
#Kushboo Family ❤️❤️ pic.twitter.com/DKhsasIRex
— Cineulagam (@cineulagam) May 15, 2021