சமீபத்தில் பெரிய பெரிய ஹீரோக்கள் தான் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட்டான உடனே தான் நடிக்க போகும் திரைப்படத்திற்கான சம்பளத்தை முன்னதாகவே வாங்கிக் கொள்வது வழக்கம்தான் அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் சூட்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் வாங்கி கொள்கிறார்கள்.
எது எப்படியோ படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையா முதலில் சம்பளத்தை அவர்கள் பெற்று விடுகிறார்கள் அந்த வகையில் வித்தியாசமான கதாநாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் யாஷ் இவர் கன்னடத்தில் கேஜிஎப் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக சம்பளத்தில் ஒரு தொகை மட்டும் அட்வான்ஸ் ஆக வாங்கிக் கொண்டு படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகுதான் முழு பணத்தையும் பெற்றுக் கொண்டாராம்.
இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் . தற்பொழுது இவர் இந்த செயலை செய்திருந்தாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய காலகட்டத்திலே இது போன்ற செயலை செய்துள்ளார்.
அந்த வகையில் புதிய தீர்ப்பு என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சித்திரா லட்சுமணன் அவர்கள் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசி உள்ளார். அப்பொழுது அவர் பேசும் பொழுது புதிய தீர்ப்பு திரைப்படம் ஆரம்பித்ததற்கும் முன்பாக விஜயகாந்த் வெரும் 5% பணத்தை மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்காக அவருக்காக பேசப்பட்ட சம்பளம் இரண்டரை லட்சம் ரூபாய் ஆனால் அவருக்கு கடைசியில் கொடுத்தது என்னவோ வெறும் 2 லட்சம் மட்டும் தான் 50,000 தருகிறோம் என்று கூறினும் அனல் கடைசி வரை தரவில்லை.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் யாரும் இந்த திரைப்படத்தை வாங்க முன்வரவில்லை இதை கவனிக்க கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீங்கள் எனக்கு கொடுத்த பணம் போதும் மீதி பணம் எனக்கு தேவையில்லை என பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்து விட்டாராம்.
இவர் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை அறிந்து நடந்து கொள்ளும் நடிகர் விஜயகாந்தின் இந்த பெருந்தன்மையான மனதை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.