யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டுமென படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் தொடங்கி மக்கள் மற்றும் ரசிகர்களும் கூக்குரல் ஈட்டனர்.
இதனையடுத்து பிரசாந்த் நீல் மற்றும் யாஷ்சும் மீண்டும் ஒருமுறை இணைந்து இதன் இரண்டாம் பாகத்தில் கமிட்டாகினர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பத்தில் சிறப்பாக எடுக்கப்பட்ட வந்தாலும் கொரோனா தொற்றுக் காரணமாக அவ்வப்போது படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது.
அப்போது தொடங்கி தற்போது வரையிலும் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது காரணம் தற்போது தற்போது நிலவும் இரண்டாம் கட்ட அலை வேகம் எடுத்துள்ளதால் படத்தை வெளியிட்டால் படம் மிகப்பெரிய வசூல் பாதிக்கபடும் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்தை தள்ளி வைக்க திட்டமிட்டு உள்ளது இந்த படத்தின் டீசர் வெளியானபோது மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து இந்த திரைப்படத்தை ஜூலை 16 வெளியிட படக்குழு திட்டம் போட்டது ஆனால் தற்போது படக்குழு இது சுத்தப்பட்டு வராது என்பதால் இந்த வருடத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் படத்தை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சரியான தேதியை குறிப்பிடாமல் இருப்பதால் தொற்று எப்போ சரி ஆகிறதோ அப்போது உடனடியாக இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. KGF 2 படத்தை நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இது ஒரு கசப்பான செய்தியாக உருமாதிரி உள்ளது.