சொகுசு கார் வழக்கில் தனுஷிற்கு நெத்தியடி கொடுத்த நீதிபதி..! இப்படி ஒரு ரிவீட்ட எதிர்பார்த்திருக்கவே மாட்டாரு..!

dhanush

சமீபத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் நுழைவு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.  இந்த விவகாரத்தில் முடிவாக தளபதி விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதனை முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் தன்னுடைய சொகுசு காருக்கு வரி நீக்கு முறை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  பொதுவாக இந்த காரானது தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர் விஜய் தனுஷ் இயக்குனர் சங்கர் ஆகிய மூவரிடமும் தான் இருக்கிறது.

அந்த வகையில் நடிகர் தனுஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த காரை வாங்கியுள்ளார். மேலும் இந்த காரை ஏதேனும் முக்கியமான விஷயங்கள் இருந்தால் மட்டும்தான் தனுஷ் இந்த காரை பயன்படுத்துவாரம் இப்படி ஒரு நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி வசூலிக்க தடை செய்ய வேண்டும் என தனுஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கிற்கு 60 லட்சத்து 66 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை தனுஷிற்கு உத்தரவிட்டுள்ளது இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆனது 50 சதவீத வரியை செலுத்தும் வகையில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த வழக்கில் தனுஷிற்கு எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகாத காரணத்தினால் இந்த விசாரணையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்த விசாரணையின் முடிவு வெளிவந்துள்ளது  அதேபோல விஜய் வழக்கில் மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதி எம் எஸ் சுப்பிரமணியம் தான் தனுஷ் வழக்கிலும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது பெட்ரோல் விலை அதிகமான அதன் காரணமாக சுமார் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் மக்கள்கள் கூட வரி செலுத்தி வருகிறார்கள் அதேபோல சோப்புக்கு கூட ஏழை மக்கள் வரி செலுத்தி வருகிறார்கள்.  இந்நிலையில் யார் வழக்கு தொடர்ந்தாலும் முதலில் அவர்கள் யாரென்று தெரிவிப்பது மட்டுமில்லாமல் அவர்கள் என்ன தொழில் செய்வார் என்பதையும் மனுவில் தெளிவாக கூற வேண்டும்.

dhanush
dhanush

அதுமட்டுமில்லாமல் தனுஷ் கொடுத்த மனுவில் தனுஷ் ஒரு நடிகர் என்பதை மறைப்பதற்கு நடிகர் தனுஷ் விளக்கம் கூற வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் ஏற்கனவே  60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் வரியில் 30 லட்சத்து 33 ஆயிரம் தனுஷ் தரப்பில் கட்டப்பட்டுள்ளது இந்நிலையில் மீதமுள்ள தொகையை 48 மணி நேரத்திற்குள் கட்ட வேண்டும் என தனுஷிற்கு நீதிமன்றம் கெடு வைத்துள்ளது.

dhanush