950 கோடிக்கு மேல் வசூல் செய்தாலும் முக்கிய இடத்தில் கோட்டை விட்ட ஜவான்.! ஷாருக்கானுக்கே இந்த நிலைமையா.?

Jawan Movie
Jawan Movie

Jawan Movie : பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் இளம் இயக்குனர் அட்லீ உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் ஜவான். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகமெங்கும் கோலாகலமாக வெளியானது.

ஷாருக்கான் உடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, சானியா மல்கோத்ரா, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு என பல திரைபட்டாளங்கள் சிறப்பாக நடித்தனர். ஜவான்  படம் முழுக்க முழுக்க அப்பா மகன்  பாசத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்ப படமாக இருந்தாலும் மேலும் ஆக்சன் எமோஷனல் போன்றவை இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

படம் இந்தியாவையும் தாண்டி அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வசூலிலும் ருத்ர தாண்டவம் ஆடியது முதல் நாளில் மட்டுமே 125 கோடிக்கு மேல் வசூல் செய்தது அடுத்த அடுத்த நாட்களிலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததால்..

வெறும் நான்கு நாட்களிலேயே 500 கோடியை தொட்டு புதிய சாதனை படைத்தது வெகு விரைவிலேயே ஆயிரம் கோடியை தொடும் என கணிக்கப்பட்ட நிலையில் கொஞ்சம் வசூல் குறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது ஆனால் நிச்சயம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் என  பலரும் அடித்து கூறி வருகின்றனர்.

தற்போது வரை மட்டுமே 950 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தினாலும் முக்கிய இடத்தில் கோட்டை விட்டு உள்ளது. கேரளாவில் மிகப்பெரிய தொகை கொடுத்து ஜவான் படத்தை வாங்கியுள்ளனர் ஆனால் அங்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் தற்போது நஷ்டமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.