கேப்டனையே தூக்கி எறிந்த ஐபிஎல் அணி.! அடுத்த கேப்டன் யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள்…

ipl
ipl

2023 காண ஐபிஎல் டி20 போட்டிகள் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க உள்ளது. இதனால் அதற்கான நடவடிக்கையில் அனைத்து அணியும் பிசிசிஐ கையில் உள்ளது. மேலும் ஐபிஎல் 2023  ஆண்டுக்கான போட்டியின் ஏலம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்று பிசிசிஐ கூறியுள்ளது. மேலும் நேற்று மாலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

அப்போது ஒரு சில வீரர்கள் எதிர்பார்த்தபடியும் சில வீரர்கள் எதிர்பாராத வகையிலும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ipl-ல்  உள்ள ஒரு அணியின் கேப்டனையே வெளியேற்றிய சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. மேலும் ஐபிஎல் 2021 இல் டேவிட் வார்னர் தான்  சன்ரைசர்ஸ் அணியில் கேப்டனாக வழி நடத்தி வந்தார் ஆனால் சன்ரைசர்ஸ் அணி மிக மோசமாக தோல்வி பெற்று புள்ளி பட்டியலில் இருந்து இறுதி இடத்தில் சென்றுள்ளது.

இதன் காரணமாக உடனடியாக டேவிட் வார்னரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வில்லியம்சனை கேப்டனாக அறிவித்தது சன்ரைசர்ஸ் அணி. கேப்டன் மாற்றத்தால் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்த சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரு ஏமாற்றம் தான் கிடைத்தது கேப்டனை மாற்றிய சன்ரைசர்ஸ் சனி தொடர் தோல்வியை சந்தித்தது. பின்னர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற ஏலத்தில் சன்ரைஸ் ரைஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வெளியேற்றிய நிலையில் டெல்லி கேப்பிடல் அணி கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து 2023 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதால் தக்க வைத்துக் கொள்ளும்  வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டு உள்ளனர் அதில் சன்ரைசர்ஸ் கேப்டனான கே வில்லியம்சனை சன்ரைசாஸ் வெளியேற்றப்பட்டார். இதனால் சன்ரைசர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அப்போ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் யார் என்று கேள்வி எழுந்த நிலையில் புவனேஸ்வர் குமார் தான் இனி வரும் ஐபிஎல்லில் கேப்டனாக விளையாடுவார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.