மிரட்டலாக உருவாகியுள்ள “நானே வருவேன் படம்” – எப்படி இருக்கு தெரியுமா.? வெளியே வந்த முதல் விமர்சனம்.

naane-varuven-
naane-varuven-

இயக்குனர் செல்வராகவன் சினிமா ஆரம்பத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் போன்ற சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்திய தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார்.

ஆனால் அதன்பின் சில வருடங்கள் சினிமா பக்கமே தென்படாமல் இருந்தார் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவுடன் முதன் முறையாக கைகோர்த்து என்ஜிகே என்னும் படத்தை இயக்கினார் ஆனால் அந்தப்படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை அதனை தொடர்ந்து படங்களை இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தினார்.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் உடன் சாணி காயிதம், விஜயின் பீஸ்ட் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். தற்பொழுது செல்வராகவன் தனது தம்பி தனுஷுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் நானே ஒருவன் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிக்கப்பட்டு தற்போது சில குறிப்பிட்ட முக்கிய பிரபலங்கள் போட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த அனைவரும் மிரண்டு போய்யுள்ளனராம் அந்த அளவிற்கு வேற லெவல் சம்பவம் செய்துள்ளார்  செல்வராகவன் நடிப்பில் தனுஷ் மிரட்டி இருக்கிறாராம் இந்த படம் நிச்சயம் தனுசுக்கும், செல்வராகவனுக்கும் மிகவும் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்த திரைப்படம் மயக்கம் என்ன திரைப்படத்தின் பாணியில் பக்கா ஆக்சன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.