கமலுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுத்த இந்தியன் 2.? இப்படி ஒரு அக்ரிமெண்ட்டா

Indian 2
Indian 2

Kamal : உலக நாயகன் கமலஹாசன் தனது படங்களில் புதுமையாய் கொண்டு வருபவர் அதன் பிறகு தான் மற்ற நடிகர்கள் படங்களில் அது பார்க்க முடியும். இப்படி படங்களில் ஏதாவது வித்தியாசத்தை கொண்டு வரும் மேலும் மக்களை மகிழ்விக்க பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார்.

அந்த கெட்டப்புகள் எல்லாம் மற்ற நடிகர்கள் போட்டு கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இப்படி வெற்றி நடிகராக ஓடிக் கொண்டிருக்கும் கமல் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார். கைவசம் இந்தியன் 2,  கல்கி , ஹச். வினோத்துடன் ஒருபடம், மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ணவும் இருக்கிறார்.

இதனால் அடுத்த மூன்று வருடங்களுக்கு பிஸியான ஹீரோவாக பார்க்கப்படுகிறார் கமல் இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சின்னத்திரையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும்   தொகுத்து வழங்க இருக்கிறார் இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் இவருடைய சம்பளம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் பற்றி கமலிடம் பேசப்பட்ட போது அவருடைய சம்பளம் 30 கோடி 2019 ஆம் ஆண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது அப்பொழுது இவர்கள் 30 கோடி சொல்லி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஷூட்டிங்கில் விபத்துக்கள் ஏற்பட கிடப்பில் போடப்பட்டது அதன் பிறகு இவர் நடித்த விக்ரம் படம் பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தை கமல் தயாரித்ததால் தனக்கு 150 கோடி சம்பளம் என அறிவித்தார் அதன் பிறகு கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக 20 நாட்கள் நடிக்க மட்டுமே சுமார் 150 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியன் 2 படத்திற்கு மட்டும் அவருக்கு சம்பளம் 30 கோடி  இந்த படத்தில் தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது  காண எதிர்பார்ப்பு அதிகரிக்க காணப்படுகிறது.