இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளது இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் யாருக்கு பலம் என்பதை கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தனது கருத்துக் கணிப்புகள் மூலம் வெளியிடுகின்றனர் அப்படிப் பார்த்தால் நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம் நியூசிலாந்து அணி இங்கிலாந்து மைதானத்திற்கு ஏற்கனவே சென்று இங்கிலாந்து உடன் ஓரிரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதால் நியூசிலாந்து சாதகமான சூழ்நிலை அமைந்துள்ளதாக பலர் கூறுகின்றனர்.
இதுவே இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக அமைந்து உள்ளது மேலும் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டியை தவிர வேறு எந்தப் போட்டிகளிலும் விளையாடாமல் பயிற்சியை மட்டுமே மேற்கொண்டு வருவதால் டெஸ்ட் போட்டி அவர்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு போதிய பயிற்சி தற்போது வரை கிடைக்கவில்லை என பலர் கூறுகின்றனர் மேலும் இங்கிலாந்து மண்ணில் பல நாட்கள் பயிற்சி செய்து அல்லது ஓரிரு டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுக்கும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.