விஜயகாந்தை பார்த்து வியந்த வருமானவரித் துறையினர்.! நடந்தது என்ன தெரியுமா.?

vijaykandh
vijaykandh

80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த நடிகர்களையும் ஓவர் டேக் செய்து ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். தற்போது இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கு என தீவிரமான ரசிகர்கள் பலரும் உள்ளார்கள் மேலும் இவர் ஏராளமான மக்களுக்கு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் முக்கியமாக பல நடிகர்கள், நடிகைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளதாக பலரும் பேட்டிகளில் கூறியுள்ளார்கள் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் அறிமுகமானார். பிறகு திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தினார் இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஒரு நல்ல அரசியல் தலைவரை இழந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

அரசியலில் அறிமுகமான சில காலகட்டத்திலேயே எதிர்க்கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு வேகமாக வளர்ந்தார் இவ்வாறு மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த இவருடைய அரசியல் பயணத்தில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவால் அப்படியே சரிந்தார். தற்பொழுது சொல்லவேண்டும் என்றால் மிகவும் உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வரும் நிலையில் வீட்டை விட்டே வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார் கேப்டன். அவர் தனது படங்களின் நாட்டின் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை உன்னத பூர்வமாக வெளிப்படுத்தி இருப்பார்.

இதனால் தமிழ் ரசிகர்கள் அனைவரதும் எங்களது கேப்டன் என கூற ஆரம்பித்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எங்களுடைய கேப்டனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது என வருத்தில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு நடிகர் கேப்டன் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மைதான் அரசியலில் கேப்டன் வளர்ந்த காலகட்டத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்களாம்.

காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை சோதனை செய்துள்ளனர் அது முடியும் பொழுது தலைமை அதிகாரி ராபர்ட் சார் உங்களை தொல்லை செய்ய நாங்கள் நினைக்கவில்லை இது எங்களது கடமை உங்க ரெக்கார்டுகளை பார்க்கும் பொழுது எவ்வளவு நல்லது செய்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது இதை நிறுத்தி விடாதீர்கள் என நெகிழ்ச்சியாக பேசிவிட்டு சென்ற உள்ளாராம்.