தல தளபதி மாஸ்க் விற்பனையில் வியாபாரிகளின் பலே ஐடியா.!

ajith-and-vijay

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்நோயை கட்டுப்படுத்த வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 பேர் உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதில் 2134 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதிக பேரில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகள் நிறுத்தப்பட்டதால் பல நிறுவனங்கள் பல கோடிகளை இழுந்துள்ளது.

அதாவது இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கொரோனவுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டனர். இதில் இருந்து நம்மை பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்துதான் வெளிவர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இதனை அடுத்து மாஸ்க்கை தொழிலாக மாற்றி உள்ளனர். அந்த மாஸ்க் கில் நடிகர்களின் புகைப்படங்களை வைத்து தயார் செய்து தற்பொழுது விற்க ரெடியாக வைத்துள்ளார். இந்த மாஸ்குகள் நமக்கு விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக கபசுர குடிநீர் மற்றும் சில வைட்டமின் நிறைந்த இயற்கை உணவுகளையும், மருந்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.