பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்ததுதான் ராஜா ராணி சீரியல் இந்த சீரியல் தற்போது இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் சரவணன் குடும்பத்தில் வேலை செய்யும் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நவ்யா சுஜி. இவர் இந்த சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கு பெண்ணாக இருந்தாலும் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தவர் அந்த வகையில் இவருக்கு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக சினிமாவின் உள்நுழைய ஆரம்பித்துவிட்டார் அந்த வகையில் தமிழ் திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் தான் நவ்யா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுத்த கதாபாத்திரமான ரித்திகா சிங் போன்று பாக்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் அவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அவர் இந்த சீரியலில் மிகவும் அடக்கமான கிராமத்து பெண் போன்று பாவாடை தாவணி அணிந்து கொண்டு நடித்து வருகிறார்.
எப்படி இருந்தாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் குழம்பிப் போய் விட்டார்கள் ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படம் அந்த அளவிற்கு இருந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.