தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பரத் தற்பொழுது பெரிதாக திரைப்படங்களின் நடிக்கவில்லை என்றாலும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவருடன் இணைந்து நடித்த பிரபல நடிகைக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் அவருக்கு துபாயில் சொகுசு வீடு, தங்க-வைர நகைகள் என அவருடைய கணவர் பரிசு மழையில் அந்த நடிகையை நனைய வைத்துள்ளார் அது குறித்த தகவல்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் தான் நடிகை பூர்ணா. இந்த படத்தினை தொடர்ந்து அருள்நிதிவுடன் இணைந்து தகராறு, சசிகுமாரின் கொடிவீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார் பூர்ணா.
இப்படிப்பட்ட நிலையில் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழனை தொடர்ந்து மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஏராளமான திரை பிரபலங்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் மேலும் இதற்கு மேல அவர் துபாயில் செட்டிலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலைகள் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற பூர்ணாவின் திருமணத்தில் அவரது கணவர் விலை உயர்ந்த பொருட்களை திருமண பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துபாயில் பெரிய சொகுசு வீடு ஒன்றை பூர்ணாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் 1700 கிராம் தங்க, வைர நகைகளையும் பரிசாக வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது.