விஜய் தொலைக்காட்சியில் தனது இளம் வயதில் இருந்து தற்போது வரை சிறந்த முன்னணி தொகுப்பாளினியாக பயணித்து வருபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் அன்புடன் டிடி, காபி வித் டிடி, நாளைய தீர்ப்பு, எங்கிட்ட மோதாதே, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், விஜய் டெலி அவார்ட்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
மேலும் இவர் பேசும் ஸ்டைலுக்கு என்றே பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் திவ்யதர்ஷினி பெரிதும் பிரபலமடைந்தார். இப்படி விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக..
சின்னத்திரையில் சுற்றித்திரிந்த டிடி வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த பவர் பாண்டி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சுந்தர் சி, ஜெய் நடித்து வரும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிகம் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காத டிடி ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்கிறார். கடைசியாக டிடி விஜய் டிவியில் நயன்தாராவின் ஒரு பட பிரமோஷன் நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கினார்.
டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி திவ்யதர்ஷினி ஒரு எபிசோடுக்கு 3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.