நடிகர்களுக்கு நிகராக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் – லிஸ்ட்டில் யார் யார் இருக்காங்க பாருங்கள்.!

tamil actresses
tamil actresses

தமிழ் சினிமாவில் சமீப காலமாக டாப் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சிறப்பாக நடித்து மற்றும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு மாபெரும் இடத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர். அந்தப் படங்களும் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

அதைப்போல அவர்களின் படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தும் நிலையில் அடுத்தடுத்த படங்களுக்கு தனது சம்பளத்தையும் அதிகரித்துக் கொள்கின்றனர்.அப்படி தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள் பற்றிய விவரத்தை பார்ப்போம்.  நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை வைத்திருப்பவர்.

கடைசியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது அதனை அடுத்து அவர் அடுத்து நடிக்கும் படங்களிலும் அதிக சம்பளத்தை கேட்டு வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு 2.5 கோடி முதல் 3.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அடுத்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா இவர் கடைசியாக புஷ்பா திரைப்படத்தில் வெளிவந்த ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

அந்த ஒரு பாடலுக்கு மட்டும் சுமார் 5 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் அதை எடுத்து தற்போது ஒரு படத்திற்கு  சமந்தா 3 கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் பெறுகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி இவர் தற்போது அதிக படங்களில் கமிட் ஆகவில்லை என்றாலும் இவர் நடித்து வரும் படங்களுக்கு 6 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

தமிழில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஒரு படத்திற்கு சுமார் 2 கோடி முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.தமிழில் பல படங்களில் நடித்த நடிகை டாப்ஸி தற்போது முழுவதும் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார் இவர் ஒரு படத்திற்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இவரை அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் பூஜா ஹெக்டே ஒரு படத்திற்கு 2 முதல் 5 வரை சம்பளம் வாங்கி வருகிறார்.இவர்களைத் தொடர்ந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், தமன்னா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் 1 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர்.