சென்னை ஏரியாவில் அதிகம் வசூல் வேட்டை நடத்திய தமிழ் படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா..

kamal rajini ajith vijay
kamal rajini ajith vijay

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வசூல் மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனால் அண்மை காலமாக அவரையே வசூலில் ஓவர்டேக் செய்து பல நடிகர்கள் அசத்துகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அஜித், விஜய், சூர்யா,  ஆகியவர்களின் படங்கள் நல்ல வசூலை அள்ளி அசத்தி உள்ளன .

குறிப்பாக அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் போன்ற படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற ஏரியாக்களில் சொதப்பினாலும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னையில் எப்போதும் அஜித் விஜய் ரஜினி கமல் போன்ற நடிகர்களின் படங்கள் நல்ல வசூலை அள்ளி சாதனைகளைக் படைக்கும். இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் மற்றும் வலிமை படங்களுடன் சேர்ந்து கமலின் விக்ரம் திரைப்படம் அமைந்துள்ளது. நான்கு வருடங்களுக்குப் பிறகு உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

படம் நேற்று கோலாகலமாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் வருகின்ற நாட்களில் அனைத்து இடத்திலும் நல்ல வசூல் அள்ளும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை ஏரியாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் எது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது

அதன்படி பார்க்கையில் முதல் இடத்தில் விஜய்யின் பீஸ்ட் – ரூபாய் 1.96 கோடி, இரண்டாவது இடத்தில் அஜித்தின் வலிமை – ரூபாய் 1.82 கோடி, மூன்றாவது இடத்தில் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் ரூபாய் 1.71 கோடி, நான்காவது இடத்தில் ரஜினியின் அண்ணாத்த ரூபாய் 1.71 கோடி வசூலித்துள்ளது.