லாக்டவுனுக்கு பிறகு வெளியான தமிழ் திரைப்படத்தின் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம்.! லிஸ்டில் யார் யார் இருக்கிறார்கள் பார்த்தீர்களா.?

ajith

கடந்த வருடம் கொரோனா காரணத்தினால் பல திரைப்படங்கள் திரையில் வெளிவராமல் OTTயில் வெளியானது. மேலும் ஒரு சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானது.அந்த வகையில் லாக்டவுனுக்கு பிறகு வெளியாகி முதல் நாளில் வசூல் சாதனை செய்த திரைப்படங்களை பற்றித்தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

வலிமை :- எச் வினோத் இயக்கத்தில் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் வெளியான அதிரடித் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம்  36.17 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அண்ணாத்த:- ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா,  கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 34.92 கோடி வசூல் சாதனை செய்தது.

annatha
annatha

பீஸ்ட் :- கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றித் திரைப்படமாக கொடுத்த நெல்சன் திலிப்குமர் அவர்களின் இயக்கத்தில் விஜய் நடித்து தற்போது வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் வெளிவந்த முதல் நாளே 26.40 கோடி வசூல் செய்துள்ளது.

எதற்கும் துணிந்தவன்:- இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் அதிரடி மற்றும் குடும்ப பாங்கான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் சூர்யா அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் 15.21 கோடி வசூல் செய்துள்ளது.

etharkum thuninthavan

மாஸ்டர்:- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம்  மாஸ்டர். இந்த திரைப்படம்  வெளிவந்த முதல் நாளே 15.03 கோடி வசூல் செய்துள்ளது.