சினிமா உலகை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் எப்பொழுதும் தனது படங்களின் மூலம் மோதிக் கொள்வது வழக்கம். நிஜ உலகத்தில் சிறந்த நண்பர்களாக இருந்தாலும் படம் என்று வந்து விட்டால் யார் பெரியவர்கள் என்பதை அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ அவரது ரசிகர்கள் ஒரு பிரச்சனையை கிளப்பி விடுவார்கள் அப்படி தான் காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடந்துவருகிறது.
ரஜினி, கமல் ஆகியோர்களை தொடர்ந்து அஜித், விஜய் திரைப்படங்கள் அடுத்ததாக வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தினால் நடிகருடன் மோதுகின்றனர். இதனால் சினிமா உலகில் வசூல் வேட்டை பாதிக்கப் படுவதாக கூறப்படுகிறது இதை உணர்ந்து கொண்ட ஒரு சில டாப் நடிகர்கள் முக்கியமான நாட்களில் சொலோவாக வெளிவந்து வசூல் வேட்டை நடத்துவதால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் நல்ல லாபத்தை பெறுகின்றனர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் டாக்டர் இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் காமெடி கலந்த திரைப்படமாக எடுத்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது மக்கள் கூட்டம் அலை அலையாக கவர்ந்து இழுத்து வருகிறது இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
சமீபகாலமாக கொரோனா நம்பளை விடாமல் துரத்தியது போல பல கம்பெனிகளிலும் சினிமாவையும் விட்டுவைக்காமல் ஆட்டம் காட்டியது தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் சினிமா துறை தற்போது திரையரங்கிற்கு 50% மட்டுமே இருக்கைகள் கொடுத்து இருந்த நிலையிலும் டாக்டர் திரைப்படம் வெளியாகி சிறப்பாக இருப்பதால் தற்பொழுது மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு பார்க்கின்றனர் அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே பல கோடிகளை அள்ளியது.
இப்படி இருக்கின்ற நிலையில் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் படங்கள் முதல் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது பற்றி தான் நாம் பார்க்க போகிறோம் அந்தவகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 26 கோடி வசூல் செய்தது. தனுஷின் கர்ணன் 10.46 கோடி, மூன்றாவது இடத்தில் டாக்டர் 6.40 கோடி, சுல்தான் 4.90 கோடி.