இரட்டை வேடத்தில் கதாநாயகன்களை மண்ணைக் கவ்வ வைத்த கதாநாயகிகள்..! அதுல இவங்க மட்டும் வேற லெவல்..!

sneha-jo
sneha-jo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கமல் ரஜினி ,அஜித், விஜய் என பல்வேறு நடிகர்களுமே திரைப்படங்களில் இரட்டை வேடத்தில் நடித்த அசத்தியுள்ளார்கள் அந்த வகையில் எந்தெந்த கதாநாயகிகள் இரட்டை வேடத்தில் நடித்த மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகை சினேகா சிரிப்பிற்கு பெயர் போன நடிகை என்று சொல்லலாம் இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதல் முதலாக பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் மூலம் தான் இரட்டை வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தில் சினேகா ஜனனி சத்யா என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த பேரழகன் என்ற திரைப்படத்தின் மூலம் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திருப்பார் இந்த திரைப்படத்தில் சூர்யாவும் இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு சூர்யா ஜோதிகா காதலர்களாக இருப்பார்கள் அதே போல மற்றொரு கதாபத்திரத்தில் இருவரும் மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார்கள்.

சமந்தா தமிழ் சினிமாவில் விஜய் மகன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 10 எண்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில்  நடிகை சமந்தா விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் வெகுளி பெண்ணாக சமந்தா நடிப்பது மட்டுமில்லாமல் மற்றொரு கதாபாத்திரத்தில் மிரட்டல் வில்லியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது மட்டும் இல்லாமல் முதன்முதலாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததை பலரும் கொண்டாடி வந்தார்கள்.

பிரியாமணி 2012 ஆம் ஆண்டு  இயக்குனர் பொன் குமரன் இயக்கத்தில் வெளியான  சாருலதா என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பிரியாமணி அவர்கள் இரட்டை வேடத்தில் மிக பிரம்மாண்டமாக நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.