தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார்கள் என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த வருகிறார். இந்த திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக தளபதி 67 திரைப்படம் தொடங்கியுள்ளதாக லோகேஷ்கராஜ் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கங்களில் கூறி வருகிறார்.
விஜய் நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்திற்கு கதாநாயகியாக திரிஷா அவர்களை தேர்வு செய்து உள்ளார்கள் என்று செய்தி சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் திரிஷா அவர்கள் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு இருக்கிறார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை த்ரிஷா 90கலீல் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். அதன் பிறகு புதுமுக நடிகைகள் சினிமாவில் நடிக்க வந்ததால் ஒருசில பழைய நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காமலே போனது. அந்த வரிசையில் நடிகை த்ரிஷாவும் அடங்குவர். பிறகு இழந்த மார்கெட்டை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று எண்ணி தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
அதுவும் இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜயிக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் உடன் இணைகிறார் திரிஷா. திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி ஆகிய திரைப்படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. இதில் விஜய்யுடன் சேர்ந்து நடித்ததால் திரிஷாவிற்கு மார்க்கெட் உயர்ந்தது.
நடிகை திரிஷாவிற்கு மார்க்கெட் இல்லாததால் திரும்பவும் விஜயுடன் நடித்தால் இழந்த மார்க்கத்தை பிடித்து விடலாம் என்று எண்ணி தளபதி 67 இல் எப்படியாவது விஜயுடன் நடிக்க வேண்டும் என்று விஜய் இடம் வாய்ப்பு கேட்டு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.