சின்னத்திரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பல மாதங்களாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்றுதான் ரோஜா இந்த சீரியல் சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியல் TRPயில் அதிக புள்ளிகளைப் பெற்று வந்தது ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த சீரியல் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கதை ஆசிரியரும் மாற்றப்பட்டுள்ளார் அப்படியிருக்கும் நிலையில் பல பிரபலங்களும் இந்த சீரியலை விட்டு போய் விட்டார்கள் அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகருக்கும் கதாநாயகியாக நடித்து வரும் நடிகைக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள்.
குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை மிகவும் உச்ச நட்சத்திரமாக மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி வருவதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கிறது என்பது மட்டும்தான்.அந்த வகையில் ரோஜா சீரியலில் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் பூஜா.
இவரது கதாபாத்திரம் கடந்த சில நாட்களாக காணவில்லை என்றாலும் தற்போது மீண்டும் இவர் இந்த சீரியலில் நடிக்க வந்துள்ளாராம் இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அதுமட்டுமல்லாமல் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் மீண்டும் ரோஜா சீரியலில் நடிக்க வந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் பல சீரியல்களில் நடித்து எப்படியாவது வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளை கைப்பற்றி விட வேண்டும் அதுதான் எங்களது ஆசை என கூறி வருகிறார்கள்.