சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “மாநாடு” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோவா மிஸ் பண்ணிட்டாரே.. வருத்தப்படும் ரசிகர்கள்.

maanaadu
maanaadu

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாநாடு” இந்த திரைப்படம் வருகின்ற 25ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது தமிழை தாண்டி இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது அதிலும் குறிப்பாக தெலுங்கில் இந்த திரைப்படம் டப் செய்யப்பட்டு உள்ளது.

இதனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் முதல் நாளே வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரியதர்ஷினி, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி போன்ற பலர் நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் இருந்து இதுவரை அப்டேட்டுகள் வெளிவந்த அனைத்துமே ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

மேலும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ். ஜே. சூர்யா பேசியது ஹீரோயினை விட எனக்கும் சிம்புவுக்கும் வரும் கதாபாத்திரம் தான் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என சொன்னார் அதற்கு ஏற்றார் போல இவர்களும் இவர்கள் வரும் காட்சிகள் மிக சிறப்பாக இருந்து உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிப்பதாக இவர்களை மிக வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் முதன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தது.

எஸ் ஜே சூர்யா கிடையாதாம் படக்குழு முதலில் நடிகர் அரவிந்த் சாமியை தான் தேர்வு செய்து உள்ளது ஆனால் அவருக்கு சரியான கால்ஷீட் அமையாத பட்சத்தில் இந்த படத்தில் இருந்து அவர் விலகினார் அதன்பிறகு எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாம்.