அஜித் மிரட்டிய “சிட்டிசன்” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ வேறு ஒருவர் தானாம்.! யார் அது தெரியுமா.?

ajith-
ajith-

நடிகர் அஜித் சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார் அந்த வகையில் 2001ம் ஆண்டு சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் சிட்டிசன்.

இதுவரை நாம் அஜீத் படங்களில் ஒன்று அல்லது இரண்டு மிஞ்சிப்போனால் மூன்று கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து இருப்பார். ஆனால் சிட்டிசன் திரைப்படத்தில் மட்டும் சுமார் 6, 7 கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டிருக்கிறார் மேலும் இவர் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து வசுந்தரா தாஸ், நக்மா, மீனா போன்ற மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் சிறப்பாக ஓடியது மட்டுமல்லாமல் அஜித்திற்கு  நல்லதொரு பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படமாக சிட்டிசன் மாறியது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் குறித்து தற்போது ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது  அஜித்தே கிடையாதாம். இந்த படத்தில் முதலில் கமலஹாசன் தான் நடிக்க இருந்தார்.

ஆனால் அப்போது கமல் ஹேராம் படத்தை இயக்கி நடித்து வந்ததால் கால்ஷீட் கிடைக்காமல் போனதால்  கமல் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.  இதனை அடுத்து நடிகர் அஜீத்தை அடுத்ததாக கமீட் செய்துள்ளது படக்குழு. நடிகர் அஜித்தும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தை ஹிட் படமான மாற்றினார்.