Ajith : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வரும் ரஜினி. சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் தக்க வைத்துக்கொள்ள ரஜினி வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் இவருக்கு நிகராக விஜய்யும் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருவதால் அடுத்த சூப்பர் ஸ்டார்..
இவர்தான் என ஒரு பேச்சுக்கள் வெடித்தது. இதற்கு ரஜினி ஜெயிலர் இசைவெளியிட்டு விழாவில் காக்கா எப்பவும் பருந்தாக முடியாது என ஒரு குட்டி கதையை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் அதன் பிறகு சினிமா பிரபலங்கள் பலரும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மக்களிடம் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் யார் என்று கருத்து கணிப்பு நடத்தி உள்ளனர் அந்த கருத்துக்கணிப்பில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நடிகரின் பெயர்கள் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வசதி வரும் சூர்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் நான்காவது இடத்தில் நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் இருக்கிறார் இவர் இந்தியன் 2, கல்கி போன்ற படங்களில் இப்பொழுதும் நடித்து வருகிறார் மூன்றாவது இடத்தில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினி இருக்கிறார் முதல் இடத்தை ரஜினி அல்லது விஜய் தான் பிடிப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சைலண்டாக முதலிடத்தை பிடித்து உள்ளார் அஜித். இவர் திரையுலகில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் அவருடைய ரசிகர்கள் மட்டும் குறைந்தபாடே இல்லை.. அதுக்கு இதுவே சாட்சி.