என்னுடைய முதல் படத்தின் ஹீரோ அப்பா கிடையாது இந்த ஹீரோ தான்.! என தன்னுடைய தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூறிய விஜயின் மகன் சஞ்சய்..

sanjay
sanjay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றினை பெற்று வருகிறார் மேலும் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் ரசிகர்கள் தொடர்ந்து நடிகர் விஜயின் படங்களுக்கு தங்களுடைய ஆதரவை அளத்து வருகிறார்கள் இவ்வாறு பொதுவாக நடிகர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படமாவது இயக்கி விட வேண்டும் என பல இயக்குனர்களின் கனவாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் தனது அப்பாவை வைத்து படம் இயக்குவது பற்றி தன்னுடைய தாத்தாவிடம் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது விஜயின் மகன் சஞ்சய் லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார் படித்து முடித்தவுடன் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் நிலையில் விஜயின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் சஞ்சய் பற்றி கூறியுள்ளார். ஒருமுறை சஞ்சயிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எஸ்ஏ சந்திரசேகர் உனக்கு என்ன ஒரு பிரச்சனையும் கிடையாது நீ ஈசியாக இயக்குனராக வந்துவிடலாம் அதாவது விஜய் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் நிலையில் உன்னுடைய அப்பாவை வைத்து நீ படத்தை இயக்கினால் கூட நீ பெரிய இயக்குனராகிவிடலாம் என கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு சஞ்சய் நான் முதலில் அப்பாவை வைத்து படம் இயக்க மாட்டேன் விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்குவேன் என தெரிவித்துள்ளார் அதற்கு காரணம் தன்னுடைய அப்பாவை வைத்து இயக்கினால் படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் எனவே விஜயினால் தான் இந்த வெற்றி கிடைத்தது என பெயர் வந்துவிடும் எனவும் கூறினாராம். இதன் காரணமாக வேறு ஒரு நடிகரை வைத்து இயக்க வேண்டும் என முடிவெடுத்தாராம் இதனால் தான் விஜய் சேதுபதியை வைத்து முதல் படத்தை இயக்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

பிறகு வெற்றியை கண்டவுடன் தன்னுடைய தந்தையை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சஞ்சய் இருந்து வருவதாக எஸ்ஏ சந்திரசேகர் சமீப பேட்டியில் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டு கூறியுள்ளார் மேலும் அந்த அளவிற்கு தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். சமீப காலங்களாக சஞ்சய் தன்னுடைய நண்பர்களை வைத்து குறும்படங்களை இயக்கி வருகிறார் எனவும் கூடிய விரைவில் மிகப்பெரிய படத்தை இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.