அந்த ஹீரோ என்னை நம்ப வைத்து மோசம் பண்ணிட்டார் – பதட்டத்தில் மொத்த உண்மையையும் கக்கிய பிரியா பவானி சங்கர்

samantha
samantha

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் இவர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்தி பின் சின்ன திரையில் சீரியல்களில் நடித்தார். இதில் தனது நடிப்பு திறமை, அழகு போன்றவற்றை வெளி காட்டினார் இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்.

மேலும் வெள்ளி திரையில் பட வாய்ப்புகளும் குவிந்தது முதலில் வைபவ் – வுக்கு ஜோடியாக “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஒ மண பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

தற்பொழுது வருடத்திற்கு குறைந்தது நான்கு லிருந்து ஏழு படம் வரை அவர் நடித்து வருகிறார். இப்போ கூட ப்ரியா பவானி சங்கர் கையில் பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. இப்படி படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும்..

சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கியூட் மற்றும் கிளாமரான புகைப்படங்கள் வெளியீட்டும் வருகிறார் இதனால் அவருடைய ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரிய பவானி சங்கர் சில விஷயங்களை வெளிப்படையாக பேசிய உள்ளார்.. நான் ஒரு சில காலகட்டத்தில் தப்பான ஒருவரை நம்பி இருக்கிறேன்..

அவருடைய வார்த்தைகள், பேச்சுகளை நம்பி இருக்கிறேன் அவருடைய பேச்சைக் கேட்டு தப்பான முடிவுகளையும் எடுத்து இருக்கிறேன் சில நேரத்தில் நாம் சிலரை மிகவும் நம்புவோம் அதேபோல்தான் நானும் நம்பினேன் என்னிடம் உள்ள பலவீனம்.. ஒரு முறை நம்பினால் மிகவும் நம்பிவிடுவேன்..  என்னைக்காவது ஒரு நாள் உஷாராக இருந்திருக்கலாம் என்று கூட தோணும் எனக் கூறியுள்ளார்.