ஏராளமான தமிழ் நடிகர் நடிகைகளின் மீது பல சர்ச்சைக்குரிய விஷயங்களை கூறி மிகவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர்தான் பயில்வான் ரங்கநாதன். பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் மூலம் ஏராளமான நடிகர் நடிகைகளைப் பற்றிய விமர்சன உரிய தகவல்களை கூறி.
இவ்வாறு பலரைப் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் கூறி வருவதால் அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏகப்பட்ட பாலோசர்கள் உள்ளனர். அந்த வகையில் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள் என பலரும் அவரின் யூடியூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பெரும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
சொல்லப் போனால் ஏராளமான நடிகர் நடிகைகள் பொது இடங்களில் கூட செய்தி வாசிப்பாளர்களிடம் இவரைப் பற்றி பேசி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்கூட நயன்தாராவுக்கு குழந்தை பிறக்காது திருமணம் ஆனாலும் மட்டும் குழந்தை பிறக்கப் போகுதா என்ன நயன்தாராவிற்கு பாடிக்காடாகத்தான் விக்னேஷ் சிவன் இருக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து 100 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவிடம் பயில்வான் ரங்கநாதனை பற்றிய கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் ஒரு பத்திரிகையாளரின் வேலையை பார்க்கிறார்.
மேலும் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நல்லதும் பேசுவார்கள் கேட்டதும் பேசுவார்கள். ஆனால் அதனையெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இவ்வாறு மற்றவர்களை பற்றி தப்பாக பேசுவதால் அதனை அவரே அனுபவிப்பார். மற்றபடி பதில் கூற ஒன்றுமில்லை, பொதுவாக சினிமா என்றால் அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
நடிகர் ராமராஜனுடன் இணைந்து ஊரெல்லாம் உன் பாட்டு என்ற திரைப்படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்து இருந்தேன் அப்பொழுது ஒருவர் ஐஸ் வரியா என கேட்டார்.அந்த காலத்தில் எனக்கு அப்படி நடந்தது திருமணமான பெண் நன்றாக புடவை உடுத்திய ரோட்ல போனா கூட யார பாக்க இப்படி மினிகிக்கிட்டு கொண்டு போறனு கேட்கும் இந்த சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோம். அதையெல்லாம் காதில் வாங்கினால் வாங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.