பிரபல வாரிசு நடிகை ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் இசையமைப்பதாக இருந்தார். அதன் பின்னர் பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார் அந்த வாரிசு நடிகை. முதல் படத்தில் முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்ததால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வீடு தேடிவந்தது.
முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அந்த வாரிசு நடிகைக்கு நல்ல பெயரும் கிடைத்தது. மேலும் அந்த வாரிசு நடிகை பிரபல ஒல்லி நடிகருடன் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது ஆனால் படம் சொல்லும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
அந்த படத்திற்கு பிறகு அந்த ஒல்லி நடிகருடன் நெருக்கம் அதிகரிக்க அடிக்கடி டேட்டிங் வரை சென்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த வாரிசு நடிகையும் ஒல்லி நடிகரும் சமூக வலைதளங்களில் தகவல்களை மாறி மாறி பகிர்ந்து கொண்டனர். இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் அந்த வாரிசு நடிகை டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததால் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் அதன் பிறகு அவருக்கு திடீரென பட வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் திரும்பினார் அங்கும் சரியான பட வாய்ப்பு அமையாததால் தன் காதலருடன் ஊர் சுற்றி வருகிறார்.
இப்படி இருந்து வந்த அந்த வாரிசு நடிகை திடீரென உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார் அந்த வாரிசு நடிகை. இதையெல்லாம் பாலிவுட் பட வாய்ப்புக்காக தான் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் உடல் எடை குறைத்தது காதலருக்காக தான் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வாரிசு நடிகையின் காதலர் நீ என்னுடைய அக்கா மாதிரி இருக்கீங்க என கேள்வி கிண்டல் செய்ததால் உடல் எடையை குறைத்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் சிலர் காதலுக்கு ஏற்ற ஜோடியாக மாறி உள்ளார் அந்த வாரிசு நடிகை என கூறியிருந்தனர் அதேபோல் ஒரு சிலர் இந்த காதல் எத்தனை நாளைக்கு தான் என்று கமெண்ட் பக்கத்தில் ரகசியமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.