சூரி என்ற பெயரை கேட்டவுடன் அதிர்ந்த அரங்கம்.! என்ன செய்வதென்று தெரியாமல் வியந்து போன விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன்.. வைரல் வீடியோ

தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வரையிலும் குணச்சத்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி முதன்முறையாக இவர் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்து வருகின்றனர்.

அதாவது குள்ளநரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூரி இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பரோட்டா காமெடியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இந்நிலையில் தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பான நடைபெற்று வந்த நிலையில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பகுதிகளாக உருவாக இருக்கும் நிலையில் முதல் பகுதி தற்பொழுது ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமான பட குழுவினர்களுடன் பல ரசிகர் பட்டாளமும் பங்கு பெற்றனர். இந்தப் படத்தில் ஏராளமான சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துக் கொண்ட நிலையில் தொகுப்பாளர் சூரி எனக் கூறியதும் அரங்கம் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கத்த தொடங்கினர்.

பிறகு விடாமல் கத்தியதால் வெற்றிமாறன், விஜய் சேதுபதி பேசிக்கொள்ள சூரிக்கு இது வியப்பாக உள்ளது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூரி கத்த வேண்டாம் என எழுந்து கூற அரங்கம் அமைதியாகவில்லை ரசிகர்களும் கத்திக் கொண்டே இருந்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து தான் அமைதியானார்கள்.