“விக்ரம்” படத்திற்கு ஆஃபர் கொடுத்த அரசாங்கம் – வசூல் வேட்டை நடத்தி ரெடியாக இருக்கும் ஆண்டவர்.! விஜய், அஜித்துக்கு கூட இப்படி கிடைக்கல..

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று கோலாகலமாக அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மாஸ்டர் கைதி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தனது கனவு நாயகன் கமலஹாசனுக்காக பார்த்து பார்த்து கதையை செதுக்கி உள்ளார். மேலும் இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் கமலஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. பான் இந்திய அளவில் உருவான இந்த விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி பகத் பாசில் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால்..

படத்தில் ஆக்ஷன் சீனுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது தெரியவருகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது. இந்த நிலையில் இன்று திரையரங்கில் வெளிவந்த விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

முதல்நாளே விக்ரம் படத்தை திரையரங்கில் காண இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தும்  ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து வருகின்றனர். மேலும் படத்தைப் பார்த்து வெளிவரும் ரசிகர்கள் பலரும் நல்லவிதமான கமெண்ட்களையே தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்திற்கு 3 நாள் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

3, 4, 5 ஆகிய தேதிகளில் விக்ரம் படத்தின் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் விஜய்யின் பீஸ்ட் அஜித்தின் வலிமை போன்ற திரைப்படங்களுக்கு கூட இந்த சிறப்பு காட்சிகள் வெளியிட அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.