தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு காரணம் இவர் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி சினிமா உலகில் இயக்குனராகவும், பாடகராகவும், டான்ஸராகவும் தன்னை மாற்றிக்கொண்டு பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.
நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் ஆரம்பத்தில் ஹீரோவாக சிறப்பான படங்களை கொடுத்து வந்த இவர் போக போக ஒரு சில படங்களில் கமிட்டாகி பின் அதிலிருந்து விலகிக் கொள்வது சரியான நேரத்திற்கு சூட்டிங் வராது.
என இவர் மீது அடுக்கடுக்காக இவர் மீது பல புகார்கள் வழங்கப்பட்டது இதனால் சிம்புக்கு கேட்ட பெயர் விழுந்தது மேலும் உடல் எடையும் ஒரு கட்டத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ஹீரோ போல தெரியாமல் இருந்தார் சிம்பு. சில வருடங்களாக சினிமாவில் இல்லாமல் இருந்ததால் இவருக்கு பின் வந்தவர்கள் கூட நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றனர்.
இதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட சிம்பு அதிரடியாக தனது எண்ணங்களையும், உடம்பையும் குறைத்து மீண்டும் தமிழ் சினிமாவில் புதிய அவதாரம் எடுத்து நடித்து வருகிறார். உண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல போன்ற பல்வேறு திரைப்படங்களில் கைவசம் இருக்கின்றன.
சினிமா உலகில் தற்போது வெற்றி கனியை ருசித்து வரும் நடிகர் சிம்பு 39 வயதை தொட இன்னும் சில நாட்களே இருக்கின்றன பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாள் வருகிறது அத்துடன் சிம்பு 39 வயதை தொட இருக்கிறார். இன்னும் ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் நடிகர் சிம்பு பல நடிகைகளுடன் காதல் வயப்பட்டு சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.
ஆனால் திருமணம் வரை இதுவரை செய்து கொள்ளாமல் வந்துள்ளது இந்த நிலையில் நடிகர் சிம்பு தனக்கு எந்த மாதிரிப் பெண் வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா போல் எவ்வளவு கொடுமை செய்தாலும் மிக பொறுமையாக இருக்க வேண்டும் எனவே அவரைப்போல் பொறுமையை கையாளும் ஒரு பெண்ணையே கல்யாணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார் நடிகர் சிம்பு.