இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பல டாப் நடிகரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவை தொடர்ந்து தனுஷ் வாத்தி படம் வெளியாகி நிலையில் அடுத்தாக சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்கள் படங்கள் வெளிவர இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கும்..
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடித்தும் இருக்கிறார் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு..
நேரடியாக வெளியாகும் என படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது பிச்சைக்காரன் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகமும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தும் என பலரும் சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக உருவாகி வருகிறது ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், நாசர், சரத்குமார், காளி வெங்கட் மற்றும் பல திரைப்பட்டாளங்கள் நடித்துள்ளனர் படத்தின் glimpse வீடியோ அண்மையில் வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த படமும் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. ஒரே நாளில் இரண்டு படங்கள் மோதுவதால் இந்த ரேஸில் ஜெயிக்கப் போவது என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..