கஜினி கதை எனக்கு தான் வந்தது.? ஆனா பிடிக்கல.. சூர்யாவிடம் ஓபன்னாக சொன்ன நடிகர்

gajini
gajini

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் தனது திரை பயணத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இப்பொழுது கூட நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் கைகோர்த்து வாடிவாசல் படம் பண்ண உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நடிகர் சூர்யா. அவர் நடித்த கஜினி படத்தை குறித்து ஒரு நடிகர் வெளிப்படையாக பேசியுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல நடிகர் மாதவன் தான்.. நடிகர் மாதவனும் சூர்யாவும் இணைந்து ஒரே வீடியோவில் பேசியிருந்தனர்.

அதில் மாதவன் பேசியது முதலில் நான் படங்களை ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஜாலியாக இருந்தேன். நீங்கள் நேருக்கு நேர் உங்களிடம் அப்படி பண்ணணும் இப்படி செய்யணும்னு நிறைய அட்வைஸ் கொடுத்திருக்கிறேன் அதன் பிறகு மணிரத்தினம் சார் உடன் வொர்க் பண்ணும் பொழுது நாம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.. அப்போது படங்கள் நன்றாக ஓடிக் கொண்டிருந்ததால் ஜாலியாக இருந்தேன்.

என் அன்பே சிவம் படம் வெளிவந்து நன்றாக ஓடிக் கொண்டிருந்தது ரொம்ப சந்தோஷத்தில் இருந்தேன் அந்த சமயத்தில் தான் கஜினி படம் ஆஃபர் வந்துச்சு.. கதை கேட்ட பிறகு எனக்கு பிடிக்கல முருகதாஸ் அவரிடம் எனக்கு இதில் நடிக்க உடன்பாடு இல்லை என கூறினேன் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா உங்ககிட்ட வந்துச்சு..

காக்க காக்க படத்துல உங்களைப் பார்த்தேன் அப்பொழுதுதான் எனக்கு தோணுச்சு இந்த படம் கரெக்டான ஆளு கிட்ட தான் போயிருக்கும்னு நான் சொன்னேன் அதை நீங்க படத்துல ப்ரூப் பண்ணிட்டீங்க என மாதவன் கூறி சூர்யாவை பாராட்டி தள்ளினார் இந்த செய்தி இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது