இயக்குனர் செல்வராகவன் அண்மைய காலமாக படங்களை இயக்குவதையும் தாண்டி நடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் முதலில் கீர்த்தி சுரேஷ் உடன் கை கோர்த்து சாணி காயிதம் படத்தில் நடித்தார். அதன் பிறகு விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்தார் ஆனால் முதலில் வெளிவந்தது.
என்னவோ பீஸ்ட படம் தான் அதன் பிறகு தான் சாணிகாயிதம் படம் வெளியாகியது. இந்த இரண்டு படத்திலும் செல்வராகவன் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து செல்வராகவனுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் தனது தம்பி தனுஷுடன் இணைந்து தற்பொழுது நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த படம் நிச்சயம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.
ஆனால் தற்போது செல்வராகவன் ஆக்சன் படங்களை இயக்கி இயக்கி அழுத்து போய்விட்டேன் இனி காதல் சம்பந்தப்பட்ட படங்களை எடுக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் என செல்வராகவன் கூறியுள்ளார். அப்படி பார்க்கையில் ஆரம்பத்தில் இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற காதல் படங்கள் சூப்பர் ஹிட்டானது.
அதுபோன்ற படங்களை இனி செல்வராகவன் இயக்கத்தில் பார்க்கலாம் என கூறப்படுகிறது ரசிகர்களும் செல்வராகவனை அப்படி ஒரு கதை இயக்கத்தால் காத்துக்கொண்டிருந்தனர் அது நிறைவேற இருப்பதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர். செல்வராகவனும் தனுஷும் இணைந்து நடித்த படங்கள் எப்பொழுதுமே நல்ல வரவேற்பை பெற்று வரும் அந்த வகையில் நானே வருவேன் படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது.