இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” படத்திற்காக வாங்கிய முழு சம்பளம் இத்தனை கோடியா.? ஆச்சரியப்பட்டுப் போன மற்ற இயக்குனர்கள்.!

lokesh
lokesh

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்னும் படத்தை இயக்கி சினிமா உலகில் அறிமுகம் ஆனார் அதன்பின் நடிகர் கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர் இப்பொழுது நடிப்பிற்கு பெயர்போன உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து முடித்துள்ளார்.

படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் உலக அளவில் 5000 திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது விக்ரம் படத்தில் கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது இந்த படத்தில் இருந்து.

இதுவரை வெளிவந்த பத்தல பத்தல பாடல், ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர், டிரெய்லர் என அனைத்தும் சிறப்பாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து இந்த படம் குறித்தும் கமல் குறித்தும் பல்வேறு செய்திகள் வெளிவருவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த டாப் நடிகர்களான விஜய் அவரை தொடர்ந்து ரஜினி அல்லது கமலை வைத்து படம் இயக்குவார் எனவும் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கி அதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

மாநகரம் படத்திற்காக 30 லட்சம் வாங்கிய லோகேஷ் அவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றியை  ருசித்தது. அதன்பிறகு தனது   சம்பளத்தை பல கோடிக்கு உயர்த்தி உள்ளார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் சுமார் 8 கோடி என தகவல்கள் உலா வருகின்றன.